search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தேர்தல் விதிமீறல்"

    வாக்குச்சாவடி முன்பு பேசிய மு.க.ஸ்டாலின், தேர்தல் நடத்தை விதிகளை மீறி பொதுவாக்காளர்களின் மனதை மாற்றும் முயற்சியில் ஈடுபட்டதாக அதிமுக புகார் கூறி உள்ளது. #LokSabhaElections2019 #ADMK #MKStalin
    சென்னை:

    தமிழகத்தில் பாராளுமன்றத் தேர்தல் மற்றும் 18 தொகுதிகளுக்கான சட்டமன்ற இடைத்தேர்தல் நடைபெற்று வரும் நிலையில், அதிமுக செய்தித் தொடர்பாளரும் வழக்கறிஞருமான பாபு முருகவேல், தலைமை தேர்தல் ஆணையருக்கு ஒரு கடிதம் அனுப்பி உள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

    திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், இன்று வாக்களித்த பின் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, வாக்காளர்களின் மனதை மாற்றும் வகையில் பேசி, தேர்தல் நடத்தை விதிகளை மீறி உள்ளார். ஆட்சி மாற்றத்திற்கு தான் வாக்களித்ததாக  கூறியதுடன், மத்திய மாநில அரசுகள் மீது பொய்யான குற்றச்சாட்டுகளை கூறுகிறார். மத்திய மாநில அரசுகளுக்கு எதிராக வாக்களிக்க வேண்டும் என்று பொது வாக்காளர்களை கேட்டுக்கொண்டுள்ளார். ஆட்சி மாற்றத்திற்கு வாய்ப்பு கிடைத்திருப்பதாகவும் கூறியுள்ளார்.



    இதன்மூலம் அவர் தனக்கு ஆதரவாக வாக்களிக்கும்படி வாக்காளர்களிடம் கேட்பது தெளிவாகி உள்ளது. இது தேர்தல் நடத்தை விதிகளை மீறிய செயல் என்பதும் தெளிவாகிறது. எனவே, தேர்தல் ஆணையம் அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் தனது கடிதத்தில் கூறியுள்ளார். #LokSabhaElections2019 #ADMK #MKStalin
    பிரசாரத்தில் விதி மீறலில் ஈடுபட்டதாக நடிகர் செந்தில் மற்றும் ஓ.பி.எஸ். மகன் ரவீந்திரநாத்குமார் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. #RavindranathKumar #ActorSenthil
    போடி:

    தேனி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் அ.ம.மு.க. வேட்பாளர் தங்கதமிழ்ச்செல்வனை ஆதரித்து நடிகர் செந்தில் பிரசாரம் செய்தார். போடி டவுன் பகுதியில் அவருக்கு பிரசாரம் செய்ய அனுமதி வழங்கப்படவில்லை. ஆனால் போடி டி.வி.கே.கே. பிரதான சாலையில் தனது பிரசார வாகனத்தை நிறுத்தி விட்டு பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார்.

    இதனையடுத்து அங்கு வந்த போலீசார் அனுமதி இல்லாமல் பிரசாரம் செய்யக்கூடாது என தெரிவித்தனர். எனவே சில நிமிடங்கள் மட்டும் பேசிய செந்தில் பின்னர் பிரசார வாகனத்தில் வாக்கு கேட்டபடி சென்று விட்டார்.

    தேர்தல் பறக்கும்படை அலுவலர் உதயகுமார் இதுகுறித்து போடி டவுன் போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் நடிகர் செந்தில் மற்றும் அ.ம.மு.க. நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

    இதேபோல் போடி வாரச்சந்தை அருகே உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அ.தி.மு.க. கரை பதித்த வேட்டிகளை வழங்குவதாக தேர்தல் பறக்கும்படை அலுவலர் சிவபிரபுவிற்கு தகவல் கிடைத்தது.

    இது குறித்து போடி டவுன் போலீஸ் நிலையத்தில் அவர் புகார் அளித்தார். அதன்பேரில் அ.தி.மு.க. வேட்பாளர் ரவீந்திரநாத்குமார் மற்றும் அ.தி.மு.க.வினர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். #RavindranathKumar #ActorSenthil
    காங்கிரஸ் கட்சியின் குறைந்தபட்ச வருவாய் உறுதி திட்டத்திற்கு எதிராக நிதி ஆயோக் துணைத் தலைவர் பேசியது தேர்தல் விதிமீறல் என தேர்தல் ஆணையம் அதிருப்தி தெரிவித்துள்ளது. #LokSabhaElections2019 #NitiAayog #RajivKumar
    புதுடெல்லி:

    மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ஏழைகளுக்கு குறைந்தபட்ச வருமான உறுதி அளிப்பு திட்டத்தின்கீழ் (நியாய்) மாதந்தோறும் 6 ஆயிரம் ரூபாய் என ஆண்டுக்கு 72 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி வாக்குறுதி கொடுத்தார். காங்கிரஸ் தேர்தல் அறிக்கையிலும் இந்த திட்டம் இடம்பெற்றிருந்தது.

    இந்த திட்டத்தை மத்திய அரசின் ‘நிதி ஆயோக்’ அமைப்பின் துணைத்தலைவர் ராஜீவ் குமார் விமர்சனம் செய்தார். இத்திட்டத்தை ஒருபோதும் நிறைவேற்ற முடியாது என்று கூறிய அவர், தேர்தலில் வெற்றி பெறுவதற்கு நிலாவை தருவேன் என்று காங்கிரஸ் வாக்குறுதி அளிக்கும் என்றும் டுவிட்டர் மூலம் தனது கருத்தை பதிவு செய்திருந்தார்.

    காங்கிரசால் முன்மொழியப்பட்ட இந்த வருமான உத்தரவாத திட்டம் பொருளாதார சோதனை, நிதி ஒழுங்குமுறை சோதனை மற்றும் நிறைவேற்று சோதனையில் தோல்வி அடைந்த திட்டம் என்றும், இதனை செயல்படுத்தினால் நிதி கட்டமைப்பு சீர்குலையும் என்றும் குறிப்பிடிருந்தார்.

    அரசு அதிகாரி இவ்வாறு கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியது. தேர்தல் ஆணையத்தில் காங்கிரஸ் சார்பில் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து, ராஜீவ் குமாரிடம், தேர்தல் ஆணையம் விளக்கம் கேட்டது. அதன்பேரில் தேர்தல் ஆணையத்திற்கு ராஜீவ் குமார் விளக்க கடிதம் அனுப்பினார். அதில், பொருளாதார வல்லுநர் என்ற அடிப்படையில் கருத்து தெரிவித்ததாகவும், அரசு அமைப்பின் சார்பில் கருத்து தெரிவிக்கவில்லை என்றும் கூறியிருந்தார்.



    ஆனால், அவரது விளக்கத்தை தேர்தல் ஆணையம் ஏற்க மறுத்ததுடன் அவரது கருத்துக்கு கடும் அதிருப்தியையும் தெரிவித்தது. இதுதொடர்பாக அவருக்கு தேர்தல் ஆணையம் ஒரு கடிதம் அனுப்பி உள்ளது. அதில், “தாங்கள் அளித்த பதில் திருப்திகரமாக இல்லை. அரசு அதிகாரிகள் பாரபட்சமற்றவர்களாக இருக்கவேண்டும். தாங்கள் கூறிய கருத்து தேர்தல் விதிகளை மீறிய செயல் ஆகும். எதிர்காலத்தில் இதுபோன்று பேசாமல் எச்சரிக்கையுடன் கருத்து தெரிவிப்பீர்கள் என எதிர்பார்க்கிறோம்.” என கூறியுள்ளது. #LokSabhaElections2019 #NitiAayog #RajivKumar
     
    தேர்தல் விதிமுறைகளை மீறி பிரசாரத்தில் ஈடுபட்டதாக தங்கதமிழ்செல்வன் உள்பட அவரது கட்சியினர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். #ThangaTamilSelvan
    ஆண்டிப்பட்டி:

    ஆண்டிப்பட்டி சட்டமன்ற தொகுதி பறக்கும்படை அதிகாரியாக இருப்பவர் நாகரத்தினம். இவர் ஆண்டிப்பட்டி போலீஸ் நிலையத்தில் அளித்த புகார் மனுவில், ஆண்டிப்பட்டியில் அ.ம.மு.க. வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் அனுமதியின்றி அதிக வாகனங்களில் ஒன்று கூடி போக்குவரத்துக்கும், பொதுமக்களுக்கும் இடையூறு ஏற்படுத்தி உள்ளனர் என தெரிவித்தார்.

    அதன் பேரில் அ.ம.மு.க. நிர்வாகிகள் மீது போலீசார் வழக்குபதிவு செய்தனர். இதேபோல் போடியில் அதிக வாகனங்கள் தேர்தல் பிரசாரத்துக்கு பயன்படுத்தப்பட்டதாக போடி டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதனையடுத்து வேட்பாளர் தங்கதமிழ் செல்வன் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

    இதேபோல் கூடலூர் அருகே லோயர்கேம்ப் பகுதியில் இரவு 10 மணிக்கு மேல் பிரசாரம் செய்ததாக லோயர்கேம்ப் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். #ThangaTamilSelvan
    சென்னை கல்லூரியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பங்கேற்ற நிகழ்ச்சியில் தேர்தல் விதிமீறல் இல்லை என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார். #LSPoll #TNCEO
    சென்னை:

    பாராளுமன்றத் தேர்தல் பிரசாரத்தின் ஒரு பகுதியாக, சமீபத்தில் சென்னை வந்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் மாணவிகளுடன் கலந்துரையாடினார். அப்போது, அரசியல் தொடர்பான பல்வேறு கேள்விகளுக்கு ராகுல் பதில் அளித்தார். ஆனால், தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும்போது, கல்லூரி மாணவிகளை வைத்து நிகழ்ச்சி நடத்தியதாக ராகுல் மீது பாஜக புகார் கூறியது.



    இதையடுத்து  ராகுல் நிகழ்ச்சிக்கு அனுமதி அளித்தது பற்றி விசாரித்து அறிக்கை அளிக்கும்படி இணை இயக்குனருக்கு கல்லூரி கல்வி இயக்குனர் உத்தரவிட்டார். மேலும், மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் தலைமை தேர்தல் அதிகாரி விளக்கம் கேட்டார்.

    இந்நிலையில், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

    சென்னை ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் ராகுல் காந்தி பங்கேற்ற நிகழ்ச்சியை நடத்தியதில் தேர்தல் விதிமீறல் இல்லை. கல்லூரி நிர்வாகம் சார்பில் முறையான அனுமதி பெற்றே நிகழ்ச்சி நடத்தப்பட்டிருப்பதாக, மாவட்ட தேர்தல் அதிகாரி விசாரித்து அறிக்கை தந்துள்ளார்.

    தேர்தலையொட்டி இதுவரை நடைபெற்ற வாகன சோதனையில் உரிய ஆவணமின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ 6.77 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.  #LSPoll #TNCEO
    தேர்தல் விதிகளை மீறியது தொடர்பாக குஷ்பு, வடிவேலு மீது தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்து மதுரை ஐகோர்ட்டு தீர்ப்பு வழங்கியது. #Khushboo #Vadivelu
    மதுரை:

    கடந்த 2011-ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலையொட்டி திண்டுக்கல் மாவட்டம் நத்தம் தொகுதியிலும், தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி தொகுதியிலும் தி.மு.க. சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்களுக்கு ஆதரவாக நடிகை குஷ்பு பிரசாரம் செய்தார். அப்போது அவர் தேர்தல் விதிகளை மீறியதாக போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்குகள் அந்தந்த மாவட்ட கோர்ட்டுகளில் நடந்து வந்தன.

    இதேபோல நத்தம் தொகுதி தி.மு.க. வேட்பாளருக்கு ஆதரவாக பிரசாரம் செய்த நடிகர் வடிவேலு மீதும் தேர்தல் விதிமீறல் வழக்கு பதிவு செய்யப்பட்டு, கோர்ட்டில் விசாரிக்கப்பட்டது.

    தங்கள் மீது வேண்டுமென்றே பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகளை ரத்து செய்து உத்தரவிட வேண்டும் என்று குஷ்பு, வடிவேலு ஆகிய இருவர் சார்பிலும் மதுரை ஐகோர்ட்டில் தனித்தனியாக வழக்குகள் தொடரப்பட்டன.

    இந்த வழக்குகள், நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பு விசாரணைக்கு வந்தன. விசாரணை முடிவில், மனுதாரர்கள் மீதான குற்றச்சாட்டுகளுக்கு போதிய முகாந்திரம் இல்லை என்று தெரிவித்த நீதிபதிகள், அவர்கள் மீதான வழக்குகளை ரத்து செய்து உத்தரவிட்டார். #Khushboo #Vadivelu
    ×